உன் மனசில பாட்டு தான் இருக்குது - Un Manasila Paatu Than Irukuthu Lyrics

உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது
அதில் என்ன வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ  ஒதுக்கு

உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது



பாட்டால புள்ளி வச்சு
பார்வையில கிள்ளி வச்சு
பூத்திருந்த என்னச் சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி
நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டுச் சொல்லி
காலமெல்லாம் ஆளனும்
சொக்கத் தங்கம் உங்களத்தான்
சொக்கி சொக்கி பாத்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம்
நான் பூத்து

உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது



நீ பாடும் ராகம் வந்து
நிம்மதிய தந்ததய்யா
நேத்து வரை நெஞ்சில் ஆச தோணல
பூவான பாட்டு இந்த
பொண்ணத் தொட்டு போனதய்யா
போன வழி பாத்து கண்ணு மூடல
உன்னோட வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
என்னோட ஆசையெல்லாம்
ஏத்துக்கனும் நீங்க தான்
உங்களத்தான் எண்ணி எண்ணி
என்னுசிரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு
சொன்னா போதும்

என் மனசில பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்ன எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசில பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது

No comments:

Post a Comment