ஏங்குது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை.. ஓ...ஓ..
வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
கங்கை வெள்ளம் பாயும் போது
கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி
பாதை மாறக் கூடுமோ
மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூத்தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட
வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்
காவல்தனை மீறுமே
காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே
வரையறைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சாரமே
கார்கால சிலிர்ப்புகள்
கண்ணோரம் உண்டாக
வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை.. ஓ...ஓ..
லா.. லா.. லா.. லா...
No comments:
Post a Comment