பாதாள லோகத்துல அழகான கூடத்துலநாகாதி நாகருக்கும் நல்லகுறி சொல்லிவரும்
எம்பேரு அங்காளி எரிகாட்டு வேதாரி
என்னோட மல்லாடி வாதம் செய்ய வந்தாயோ
முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா
ஆலால கண்ட முனி ஆலமரம் ஏறும் முனி
காலாதி காலனுக்கும் சண்டப்பிரசண்ட முனி
மாயாண்டி ரூபம் கொண்ட மயானத்தைக் காக்கும் முனி
முனியாண்டி என்னோட செய்யாதே அக்கப்போரு
ஈடுகாட்டுக் காளி சும்மா ஆடாதே நீலி
பாதாள லோகத்துல அழகான கூடத்துலநாகாதி நாகருக்கும் நல்லகுறி சொல்லிவரும்
எம்பேரு அங்காளி எரிகாட்டு வேதாரி
என்னோட மல்லாடி வாதம் செய்ய வந்தாயோ
முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா
ஆலால கண்ட முனி ஆலமரம் ஏறும் முனி
காலாதி காலனுக்கும் சண்டப்பிரசண்ட முனி
மாயாண்டி ரூபம் கொண்ட மயானத்தைக் காக்கும் முனி
முனியாண்டி என்னோட செய்யாதே அக்கப்போரு
ஈடுகாட்டுக் காளி சும்மா ஆடாதே நீலி
முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா.. லேசா..
ஈடுகாட்டுக் காளி நான் சூட்சமதாரி
வங்காள வித்த காளி வழக்காட வந்த காளி
கேள்விய நீ கேக்கிறியா இல்ல நான் கேட்கட்டுமா
ஆண்டி முனியாண்டி பரதேசம் வந்த ஆண்டி
பொன்னுக்குத் தான் மொத இடம்
கேள்விய நானே கேட்குறேன்
கருகருன்னு கருத்தவனே கருத்தமுனி ஈஸ்வரனே
முடிமுடியா முடிஞ்சு போட்டு மொரட்டு ஜட பொழத்தவனே
தைபிறந்தா பாம்போடு திரிவதென்ன ராவோடு?
கையோடு திருவோடு இதுதானா உன் பாடு?
பிச்சாண்டி முனீஸ்வர ஈசா
உன் லட்சணங்கள் இருக்குதய்யா பேசா
பிச்சாண்டி முனீஸ்வர ஈசா ஈசா
உன் லட்சணங்கள் இருக்குதய்யா பேசா பேசா
காட்டேறிய சாட்டிவிட கருமுடிய வளர்த்துருக்கேன்
பிசாச மூக்கறுக்க பாம்புதடி வச்சுருக்கேன்
பண்டாரம் பசிதீர்க்க திருவோடு எடுத்திருக்கேன்
சண்டாளி ஏ காளி வாங்காதே வாயாடி
கருப்பட்டி நிறத்தாளே காளி
நீ பொறுப்பில்லாம கேக்கிறியே கேள்வி
கருப்பட்டி நிறத்தாளே காளி
நீ பொறுப்பில்லாம கேக்கிறியே கேள்வி
அண்ணன் தம்பி ஏழுபேரு அத்தனையும் தாருமாறு
வாள் முனையின் சேட்ட பாத்து பயப்படாத ஆளு யாரு?
அடங்காத முனிகளா ஆலங்காட்டு முனிகளா
ஊரையெல்லாம் பயமுறுத்த உருண்டு தெரண்டு வந்தீகளா?
மூண்டாதே முனீஸ்வர ஈசா
பதில் கொண்டாடா முனீஸ்வர ஈசா
மூண்டாதே முனீஸ்வர ஈசா ஈசா
பதில் கொண்டாடா முனீஸ்வர ஈசா
அண்ணன் தம்பி ஏழுபேரு அர்த்தமுள்ள தெய்வம் பாரு
மூர்க்கமான முனியிடத்தில் முத்து போல குணத்த பாரு
வாள் முனையின் விளையாட்ட பக்தி என்று சொல்லுவாரு
ஊருக்கெல்லாம் காவக்காரன் நாங்கதான்டி பத்ரகாளி
பாதங்கள் ஆடாதே காளி வீண் வம்புக்கு அலையாதே காளி
ஹ.. ஹ.. ஹ..
காளி நீயும் ஈசன் அம்சம் நானும் ஈசன் அம்சம்
என்ன நான் வீரம் நீ கோரம்
கோரம்ன்னு சொல்லாத கோவத்த கெளப்பாத
முடிஞ்சா கேள்விய கேளு இல்ல திரும்பி பாக்காம ஓடு ஓடு ஓடு
கேட்குறேன்
கொடுகொட்டி பறைதட்டி பகைமுட்டி தலைவெட்டி
விளையாட்டு செய்வதேன் காளி?
ஆண்டவனின் வரத்தாலே அரக்கர் பலர் முளைத்தாரே
அதனாலே பலிகொண்டேன் ஈசா
தீக்கொள்ளி அதை அள்ளி கண் கொண்ட ரணகள்ளி
கோரமாய் பார்ப்பதேன் காளி?
என்னருமை பிள்ளைகளை கண்ணீரைக் காக்கவரும்
அதை ஏவி ஓட்டவே ஈசா ஈசா
கடகமணி என்று கபாலங்கள் கொண்டு
மாலையென சூடியது ஏன்டி?
கதைமுடிவில் யாவர்க்கும் பாறைகளும் பாவர்க்கும்
என்பதை காட்டவே ஆண்டி
ஒரு ஊன்டு பலிகேட்டு உக்ரமாய் வெறியாட்டு
நடத்துவது அடுக்குமோ காளி?
என் மீது பலிபோட்டு மனிதர்களின் விளையாட்டு
அறியாமை என்றேனே ஈசா
பாவாட பூசாரி நாவோடு விளையாடி
உருலுமொழி சொல்வதேன் காளி?
இருளோட்டி அருள் காட்ட
மருளாட்டு விளையாட்டு அவர் மீது நடத்தினேன் ஈசா
கனவாசம் நீங்கி வனவாசம் வந்து
வெளிவாசல் நிற்பதேன் காளி?
ஊராரைக் காக்க உறங்காமல் இருக்க
கடுங்காவல் செய்யவே ஈசா ஈசா
பாதாள லோகத்துல அழகான கூடத்துலநாகாதி நாகருக்கும் நல்லகுறி சொல்லிவரும்
எம்பேரு அங்காளி எரிகாட்டு வேதாரி
என்னோட மல்லாடி வாதம் செய்ய வந்தாயோ
முனீஸ்வர ஈசா என்ன ஜெயிப்பது லேசா
ஆலால கண்ட முனி ஆலமரம் ஏறும் முனி
காலாதி காலனுக்கும் சண்டப்பிரசண்ட முனி
மாயாண்டி ரூபம் கொண்ட மயானத்தைக் காக்கும் முனி
முனியாண்டி என்னோட செய்யாதே அக்கப்போரு
ஈடுகாட்டுக் காளி சும்மா ஆடாதே நீலி