காட்டுப்பயலே கொஞ்சிப் போடா - Kaatu Payale Konji Poda Lyrics

காட்டுப்பயலே கொஞ்சிப் போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கிப் போக வந்த பயடா நீ
கரட்டுக் காட கெடந்த என்ன திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுக்குறடா நீ

திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பாத்து
சுருட்ட பாம்பா ஆக்கிப்புட்ட நீ
என் முந்தியில சொருகி வச்ச சில்லரைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சுப்புட்டு போற நீ
பாரங்கல்ல இருந்த என்ன பஞ்சு போல ஆக்கிப்புட்ட
என்ன வித்த வச்சுருக்க நீ 

யான பசி நான் உனக்கு யான பசி
சோள பொரி நீ எனக்கு சோள பொரி

லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 


பாசத்தால என்ன நீயும் பதற வைக்கிற
பத்திக்கிட்டு எரியும் என்ன பாத்து நிக்கிற
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்கிற
தூரம் நின்னே என் மனச மேய வைக்கிற

நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெட்கம் கெட்டு நிக்கிறேன்
உச்சு கொட்ட வைக்கிறியே வாடா
நீ எச்சி ஊற வைக்கிற என் ஒடம்ப தைக்கிற
எதுக்கு தள்ளி நிக்கிற வாடா

நான் சாமத்துல முழிக்கிறேன்
சாரப்பாம்பா நெளியிறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
உன் மொரட்டு ஆச எனக்கு தான்
அதுவும் தெரியும் உனக்கு தான்

என்ன செய்ய ஒன்ன 
தின்னு தீக்க போறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சி கொல்லப் போறேன்

வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்கிற
வேலுக்கம்பு வார்த்தயால குத்தி கிழிக்கிற
சூதனமா அங்க இங்க கிள்ளி வைக்கிற
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வைக்கிற


நீ தொட்டு பேசு சீக்கிரம்
விட்டு போகும் என் ஜூரம்
வெட்டி கத பேசவேணா வாடா
நான் ஓலப்பாய விரிக்கிறேன்
ஒனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு போடா

நீ எதுக்கு தயங்கி நிக்கிற
என்ன ஒதுக்கி வைக்கிற
சும்மா மொரண்டு பிடிக்கிற கட்டி அள்ளுடா
உன் மொரட்டு திமிரு எனக்கு தான்
அதுவும் தெரியும் உனக்கு தான்

பொத்தி வச்ச ஆச பொங்குதடா உலையா
பொத்துகிட்டு ஊத்த போகுதடா மழையா

லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு - Pallikattu Sabarimalaiku Lyrics

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக்கட்டு... சபரிமலைக்கு
கல்லும் முள்ளும்.. காலுக்கு மெத்தை
ஸ்வாமியே.. ஐயப்போ..
ஸ்வாமி சரணம்.. ஐயப்ப சரணம்..

பள்ளிக்கட்டு... சபரிமலைக்கு
கல்லும் முள்ளும்.. காலுக்கு மெத்தை
ஸ்வாமியே.. ஐயப்போ..
ஸ்வாமி சரணம்.. ஐயப்ப சரணம்..

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூரதீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன்மார்களும் தூரிக்கொண்டு 
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரிமலைக்குச் சென்றிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே


கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே
உனை பார்க்கவேண்டியே தவமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே
உனை பார்க்கவேண்டியே தவமிருந்து

இருமுடி எடுத்து எருமேனி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் பாபரைத் தொழுது
ஐயனின் அருள்மலை ஏறிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

அழுகை ஏற்றம் ஏறும்போது
ஹரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக்கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
பெருநரி பம்பையைக் கண்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே


கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலம் இன்றி ஏறிடுவார்
பீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா.. பாத பலம் தா..
தேக பலம் தா.. பாத பலம் தா..
தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தைத் தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தைத் தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே


சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையைப் பணிந்திடுவார்
மரங்குத்தியானில் கன்னமார்களும் மரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவனை சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கயிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு... சபரிமலைக்கு
கல்லும் முள்ளும்.. காலுக்கு மெத்தை
ஸ்வாமியே.. ஐயப்போ..
ஸ்வாமி சரணம்.. ஐயப்ப சரணம்..

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா

பகவான் சரணம் பகவதி சரணம் - Bagavan Saranam Bagavathi Saranam Lyrics

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

பகவான் சரணம்... பகவதி சரணம்
தேவன் பாதம்.... தேவி பாதம்
பகவானே.. பகவதியே
தேவனே.. தேவியே..

பகவான் சரணம்... பகவதி சரணம்
தேவன் பாதம்.... தேவி பாதம்
பகவானே.. பகவதியே
தேவனே.. தேவியே..

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...


அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
ஸ்மரணம் ஸ்மரணம் ஐயப்பா

நரிமலை வாசா பாபவிநாசா
சரணம் சரணம் ஐயப்பா
நரிமலை வாசா பாபவிநாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

மகிஷிசம்ங்காரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
மகிஷிசம்ங்காரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுணவிலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுணவிலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா


ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண வந்தோம்...ஓம்...
ஐயப்பா.. ஆ...
ஐயப்பா.. ஐயப்பா..
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண வந்தோம்
பாலபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலனைக் கடைக்கண் பாரப்பா
பாலபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலனைக் கடைக்கண் பாரப்பா

முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எமக்கப்பா
முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எமக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா
உந்தன் பொற்பத மலர்கள் எமக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா
உந்தன் பொற்பத மலர்கள் எமக்கப்பா


தேவன் பாதம் தேவி பாதம் சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா தேவை உன் திரு நாமமப்பா
நெய்யபிஷேகம் உனக்கப்பா உன் திவ்யதரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா அருள் செய்யப்பா
மனம் வையப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

பகவான் சரணம்... பகவதி சரணம்
தேவன் பாதம்.... தேவி பாதம்
பகவானே.. பகவதியே
தேவனே.. தேவியே..

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

சரணம் சரணம் ஐயப்பா...ஸ்வாமி சரணம் ஐயப்பா...
சரணம் சரணம் ஐயப்பா...ஸ்வாமி சரணம் ஐயப்பா...

ப்ரேமம் மலரே - Premam Malare Song Lyrics

தெளிமானம் மழவில்லின் நிறமணியும் நேரம்
நிறமார்ன்னொரு கனவென்னில் தெளியுன்ன போலே
புழயோரம் தழுகுன்னி தணுவீரன் காற்றும்
புளகங்கள் இழனெய்தொரு குழலூதிய போலே
குளிரேகும் கனவென்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகமருவும் மயிலிணகள் துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்

அழகே.. அழகில் தீர்த்தொரு சிலயழகே
மலரே.. என்னுயிரில் விடரும் பனிமலரே


மலரே நின்னே காணாதிருன்னால்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்னபோலே
அழிவோடென்னறிகத்தினணையாதிருன்னால்
அழகேகிய கனவெல்லாம் அகழுன்னபோலே

ஞானென்டே ஆத்மாவினாழத்தினுள்ளில்
அதிலோலமாரோருமறியாதே சூக்சிச்ச
தாளங்கள் ராகங்கள் ஈனங்களாயி
ஓரோரு வர்ணங்களாயி

இடருன்னொரென்டே இடனெஞ்சினுள்ளில்
ப்ரணயத்தில் மழையாய் நீ பொழியுன்னி நாளில்
தளருன்னொரென்டே தனுதோரும் நின்டே
அலதல்லும் ப்ரணயத்தாலுணரும் மலரே..

அழகே...


குளிரேகும் கனவென்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகமருவும் மயிலிணகள் துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்

அழகே.. அழகில் தீர்த்தொரு சிலயழகே
மலரே.. என்னுயிரில் விடரும் பனிமலரே

முழுமதி அவளது முகமாகும் - Mulumathi Avalathu Mugamaagum Lyrics

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஓ..
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தழும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கைப் பார்க்கிறதே

ஹோ.. ஹோ..
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலை கோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமோ

ஓ..ஓ..
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்    

தன்மானம் உள்ள நெஞ்சம் - எங்கேயோ திக்குதெச - Thanmaanam Ulla Nenjam Lyrics

பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்

தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாளாது
செவ்வானம் மின்னல் வெட்டி பன்னீரு வீழாது
காவேரித் தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலறுந்து வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு கூடிகட்டி ஆடுவேன்
அந்நாளில் நான் இருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஓ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு


எங்கேயோ திக்குதெச காணாத தூரந்தான்
எம்மாடி வந்ததென்ன என் வாழ்க்கை ஓடந்தான்
காவேரித் தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி
கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணாற நானும் காண இத்தனை நாள் ஆனது
இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும்பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி

நான் கங்கா நதியைக் காணும்பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஓ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - Nadanthal Irandadi Irunthal Lyrics

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடி போதும்...
இந்த நிலவும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி


றெக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒன்னும் தேவையில்லை
புத்தி உள்ள பிள்ளை இது
கெட்டு நிக்க போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தையுண்டு கேளம்மா
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டியின்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அனாதையில்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி


ஆனை கட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கரமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான்
அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டிப்போட்ட மண்ணுதான்
அதை கட்டிக் காத்தா பொன்னுதான்
நாம் வாழும் வாழ்வே அது சில காலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடி போதும்...
இந்த நிலவும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி

சம்சாரம் அது மின்சாரம் - Samsaram Athu Minsaram Lyrics

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரம் இல்ல சம்சாரம்...
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல சம்சாரம்...
நேரம் வந்து நெருங்கி தொட்டா சாக்கடிக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்கு தானடி
பாராங்கல்ல பெத்துபுட்டா பாசம் ஏதடி
பெத்தபுள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா
தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
வாயக்கட்டி வளர்த்த புள்ள மல்லுக்கட்டி நிக்குதடி
வாங்கித்தந்த காசுக்கெல்லாம் வட்டி கட்ட சொல்லுதடி
கோடு ஒன்னு கிழிக்க வச்சு கும்மி அடிக்குது அம்மாடி

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரம் இல்ல சம்சாரம்...
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல சம்சாரம்...
நேரம் வந்து நெருங்கி தொட்டா சாக்கடிக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்


காலில் ஒரு முள்ளு தச்சா கண்ணு கலங்குது
கண்ணில் ஒரு தூசு பட்டா கைதான் ஓடுது
சேவல் அன்று கோடு கிழிச்சு வேலி போட்டது
வேலி தாண்டி கோழி போக வேளை வந்தது
அக்கம் பக்கம் யாருமில்ல ஆபத்துக்கு பாவமில்ல
பாசத்துக்கு சட்டமில்ல மீறுவது குத்தமில்ல
பாசத்துக்கு றெக்க மொளச்சு பறந்து போகுது தன்னால

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள ஆளுமுண்டு
நெஞ்சுக்குள்ள ஈரமுண்டு சம்சாரம்
பந்தமுண்டு பாசமுண்டு 
சொந்தத்துக்கும் உள்ளமுண்டு சம்சாரம்
சூட்சமத்த தெரிஞ்சுகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்


வயசு வந்த புள்ள ஒன்னு பாடம் படிக்குது
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் வெளங்குது
கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சது
கணவன் இங்கே பிள்ளை என்று கண்டு கொண்டது
தன்னடக்கம் வேணுமம்மா பெண்மைக்கது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும் கால நேரம் உள்ளதம்மா
இல்லறத்தில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள ஆளுமுண்டு
நெஞ்சுக்குள்ள ஈரமுண்டு சம்சாரம்
பந்தமுண்டு பாசமுண்டு 
சொந்தத்துக்கும் உள்ளமுண்டு சம்சாரம்
சூட்சமத்த தெரிஞ்சுகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்


இந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல
வாய் தொறந்து சொல்ல வந்த வார்த்த வரல
வானவில்ல சின்ன புள்ள வளைக்க பார்க்குது
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது
சிறகொன்னு மொளைக்குமுன்னே பறக்குது பட்டாம்பூச்சி
காமதேவன் ராஜாங்கத்தில் இது ஒரு கண்ணாமூச்சி
ஆத்துமேட்டில் எழுதி வைச்சத அலை அடிச்சது அண்ணாச்சி

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்பு கொள்ள ஆளுமுண்டு
நெஞ்சுக்குள்ள ஈரமுண்டு சம்சாரம்
பந்தமுண்டு பாசமுண்டு 
சொந்தத்துக்கும் உள்ளமுண்டு சம்சாரம்
சூட்சமத்த தெரிஞ்சுகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு - Kappaleri Poyaachu Suthamaana Lyrics

கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா

விடியில் வரையில் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வைக்கலெல்லாம் வாளாச்சு 
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா...

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
நெடு வானம் தூவும் தூரல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

இப்ப கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா


வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம்
கண்களால் கன்னத்தில் போட
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இங்கு நீ அங்கு நான் போராட

உனை கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோர் தீவா ஆனேன் வா வா
அம்மம்மா நாளெல்லாம் 
கானல் நீரை குடித்தேன்

இப்ப கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா

லாலல்லா லாலல்லா லாலல் லாலல்லா..
லாலல்லா லாலல்லா லாலல் லாலல்லா..
லா லா லா லா..
லாலல்லா லல்லா லாலல்லா...


அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததை சொன்னதா பூங்காற்று

உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில் ஆடி
கை தொட்டு மெய் தொட்டு 
உன்னில் என்னைக் கரைப்பேன்

இப்ப கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா

நன்றி: வாலி

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே - Kuthala Kuyile Kuthala Kuyile Lyrics

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா

சிட்டாகப் பறக்கும் பொன்னான மயிலே
தப்பாக எண்ணலாமா
என்ன தப்பாக எண்ணலாமா
எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்தபோது

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா


போகாத பள்ளியறை ஏதேதோ பாடம் தர
கேட்டேன் நானும் சந்தோசமா
வேண்டாத சாமியில்ல வேறேதும் நாதியில்ல
வேண்டும் பாவி நான் தானம்மா

வாராத எண்ணமில்ல கூடாத வண்ணமில்ல
வாம்மா மாமன் கையோரமா
பூமாலை கட்டவில்ல பொன்னாரம் பூட்டவில்ல
ஏம்மா கூட நாளாகுமா

ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்
ரெண்டு விழி பார்வை ஒன்னாகும்
காத்திருக்கும் நேரம் என்னாகும்
காதல் எனும் நோயில் புண்ணாகும்
மொழி நீதானம்மா சொல்ல நான் தானம்மா
கேட்டேனம்மா விட மாட்டேனம்மா

ஆ..ஹா ஹா.. ஆஹா..  ஆ..ஹா ஆ ஹா ஹா.... ஆ...

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா


ஏழேழு ஜென்மத்தொட்டு இல்லாத வண்ணந்தொட்டு
நானே செய்த பொன்னோவியம்
வாழ்நாளில் இன்பம் தந்து ஆனந்தம் கொண்டு வந்து
வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்

ஏடோடு வந்த சொந்தம் எப்போதோ தந்த பந்தம்
இன்றும் என்றும் ஒன்றானது
பூவொன்று மாலை என்று தோளோடு சூடிக்கொண்டு
பூட்டும் காலம் உண்டானது

எட்டுத்திசை எங்கெங்கும் கொண்டாட
கொட்டி வந்து நம் காதல் பண்பாட
ஒட்டும் வண்ணப்பூவோடு பட்டாட
புன்னகையில் உன் மோகம் தொட்டாட
இந்த நாள் தானம்மா உந்தன் ஆள் நானம்மா
தேன் நீயம்மா அந்த மான் தானம்மா

ஆ..ஹா ஹா.. ஆஹா..  ஆ..ஹா ஆ ஹா ஹா.... ஆ...

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்தபோது

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா

அன்பு என்பதே தெய்வமானது - Anbu Enbathe Deivam Aanathu Lyrics

அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது
கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது
உள்ளமென்பதுள்ளவர்க்கு உண்மையானது
உலகமென்பதுள்ளவரை உறுதியானது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது


மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது


அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது


பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது

நன்றி: கண்ணதாசன்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே - Kadavul Ullame Or Karunai Illame Lyrics

ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே


சின்னச் சின்னப் பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா
ஊனமுள்ள பேரை காத்திடும் இறைவா எம் இறைவா

ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாசபந்தமே

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே


கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

நன்றி: வாலி

எங்கே அந்த வெண்ணிலா - Enge Antha Vennilaa Lyrics

னானா னன னானனா..
னானா னன னானனா..

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா

தையாரே தையத்தையத் தையா....
தையாரே தையத்தையத் தையா....
தையாரே தையா தையா தையாரே தையா தையா..
தையாரே தையத்தையத் தையாரே தைய தையய்யா..


தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா.. ஆ.... உன்னால் தானம்மா..
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்...
உன்னால் தானம்மா.. ஆ.... உன்னால் தானம்மா..

எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு 
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தாலென்ன மறுத்தாலென்ன 
நீ தான் எந்தன் ஒளிவிளக்கு
என்றும் நீ தான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா

யா.. யாயி யாயே.. யாயி யா.. யாயியா..
யா.. யாயி யாயே.. யாயி யா.. யாயியா..
யாயி யா.. யாயியா..


மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா 
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
நீ இருந்தாலென்ன பிரிந்தாலென்ன 
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா..

கண்ணே கலைமானே - Kanne Kalaimaane Lyrics

கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ

கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே


ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில்பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி

கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ
ராரி ராரோ.. ஓ. ராரிரோ

நன்றி: கண்ணதாசன்

அந்தி மழை பொழிகிறது - Anthi Malai Poligirathu Lyrics

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....

தேனில் வண்டு மூழ்கும்போது

ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....

பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்


தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்

ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....ஆ...ஆ....

தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது


நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் 
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

ஆ...ஆ....

சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

ராசாத்தி ஒன்ன காணாத - Rasathi Onna Kaanaatha Lyrics

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது


கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீ தானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீ தானம்மா
தத்தித் தவழும் தங்கச்சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத்தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது


மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண் மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது - Ithu Oru Ponmaalai Poluthu Lyrics

ஹே....... ஓ.........  ம்........ லலலா.. 
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

ம்.. ம்... ம்.. ஹே.. ஆ... ஓ.. ம்.... ம்....ம்..

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது


வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்

ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

ஆ.. ஹே....... ஓ.........  ஆ....... லலலா.. 
ம்..ம்...ம்...ஹே....... ஓ.........  ஆ.......ம்..ம்..ம்...

உனக்கென்ன மேலே நின்றாய் - Unakenna Mele Nindraai Lyrics

தகதினதக ததுந்தோம்..தகதினதக ததுந்தோம்..
தகதினதக ததுந்தோம்..தகதினதக ததுந்தோம்..
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதின
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதின
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதினதோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ.. நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ.. நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ.. நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதின
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதின
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதினதோம்


ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் நூலா நீ சொல்லு நந்தலாலா


யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளைக்கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ.. நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக ததுந்தோம்..தகதினதக ததுந்தோம்..
தகதினதக ததுந்தோம்..தகதினதக ததுந்தோம்..
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதின
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதின
தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தோம்ந்த தகதினதோம்

பூஜைக்கு வந்த மலரே - Poojaiku Vantha Malare Lyrics

பூஜைக்கு வந்த மலரே வா 
பூமிக்கு வந்த நிலவே வா
பெண் என்று எண்ணி பேசாமல் வந்த
பொன்வண்ண மேனி சிலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா 
பூமிக்கு வந்த நிலவே வா
ஓ.. ஓ.. ஓ..
பெண் என்று எண்ணி பேசாமல் வந்த
பொன்வண்ண மேனி சிலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனங்கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனங்கொள்ள வந்த இறைவா வா
ஓ.. ஓ.. ஓ..
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா


கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஓ.. ஓ.. ஓ..
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா

அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனங்கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா


செக்கச்சிவந்த இதழோ இதழோ 
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூ மலரும்

எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனங்கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா 
பூமிக்கு வந்த நிலவே வா
பெண் என்று எண்ணி பேசாமல் வந்த
பொன்வண்ண மேனி சிலையே வா

மாலையில் யாரோ மனதோடு - Maalaiyil Yaaro Manathodu Lyrics

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் .. ஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மேதுவாக வீச


வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச


தரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் .. ஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - Nalla Nalla Pillaigalai Lyrics

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி


தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப்பார்க்கனும்
தப்பு செய்தவன் வருந்தியாகனும்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி


அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி


கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல்.. ஓ.. 
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்.. ஆ..
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்.. ஆ..
மேடையில் முழங்கு திரு வி க போல்..
மேடையில் முழங்கு திரு வி க போல்..

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - Silar Siripaar Silar Aluvaar Lyrics

காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே.. ஏ..
கண்ணீரும் புன்னகையும் கலந்து வர நின்றேனே.. ஏ.. 
ஒன்றுபட வழியிலயே உண்மைக்கு மொழியிலயே.. ஏ.. 
உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலயே.. ஏ.. 

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்


பாசம் நெஞ்சில் மோதும்
அந்த பாதையை பேதங்கள் மூடும்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்த பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்


கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில் - Theerthakarayinile Therku Moolayil Lyrics

தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே.. ஏ..
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி...
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி..ஆ..ஆ...
பாவை தெரியுதடி...

தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே..ஏ..
தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே..
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி...
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி..ஆ..ஆ...
பாவை தெரியுதடி...


மேனி கொதிக்குதடி தலை சுற்றியே...
வேதனை செய்குதடி..
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்..
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துலவுதோ
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துலவுதோ

தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்

அகரம் இப்போ சிகரம் - Agaram Ipo Sigaram Lyrics

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு

சங்கீதமே சந்நிதி....சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி....சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு


கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே..ஏ....
நம்பிக்கை உங்கள் கையிலே.. ஏ.. 

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு


தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சந்நிதி....சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு

நன்றி: வைரமுத்து

கண்ணம்மா கனவில்லையா - Kannamma Kanavillaya Lyrics

கண்ணம்மா.. ஆ...  கனவில்லையா....ஆ...
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா..ஆ...

கண்ணம்மா..கனவில்லையா....ஆ...
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா..ஆ..

சொல்லம்மா வாசல் வர வழியில்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா

கண்ணம்மா..கனவில்லையா....ஆ...
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா


உன் குரல் கேட்கலயா.. கேட்கலயா
இல்லை குயில் கூட கூவலயா...ஆ.
உன் குரல் கேட்கலயா.. 
இல்லை குயில் கூட கூவலயா...ஆ..
உன் முகம் பார்க்கலயா..ஆ...
இல்லை ஜாதிப்பூ பூக்கலயா.. ஆ
உன் முகம் பார்க்கலயா..
இல்லை ஜாதிப்பூ பூக்கலயா
உன் பாதம் பதியலயா.. 
இல்லை மண்ணில் யாரும் வரயலயா.. ஆ. 
உன் பாசம் போதலயா.. ஆ...
இல்லை புவி கூட சுற்றலயா.. ஆ.. 
இல்லை புவி கூட சுற்றலயா.. ஆ.. 
எதுவுமே புரியலயா.. இல்லை என்னைத்தான் புரியலயா.. 
புரியலயா.. 
என் இடம் தெரியலயா.. ஆ..
இல்லை என்னிடம் நான் தெரியலயா.. 
என்னிடம் நான் தெரியலயா.. 

கண்ணம்மா.. கனவில்லையா....
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா


உன்னுள்ளில் நான் இனிக்கலயா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலயா.. ஆ...
உன்னுள்ளில் நான் இனிக்கலயா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலயா.. ஆ..
உன் கண்ணில் நான் சிரிக்கலயா.. ஆ..
இல்லை உயிரிலே கலக்கலயா..
உன் கண்ணில் நான் சிரிக்கலயா.. ஆ..
இல்லை உயிரிலே கலக்கலயா..
உன் கனவில் நான் காணலயா..
இல்லை நினைவிலும் நான் இல்லையா..
உன் மனதில் நான் துணையில்லையா
இல்லை துணை தேட துணிவில்லையா
எதுவுமே புரியலயா.. இல்லை என்னைத்தான் புரியலயா.. 
புரியலயா.. 
என் இடம் தெரியலயா.. ஆ..
இல்லை என்னிடம் நான் தெரியலயா.. 
என்னிடம் நான் தெரியலயா.. 

கண்ணம்மா.. ஆ.. கனவில்லையா....
கண்தனில் சுகம் இல்லையா..
என்னம்மா பொழுதில்லையா
மனம்தனில் எந்தன் தொல்லையா

நான் பாடும் மௌன ராகம் - Naan Paadum Mouna Ragam Lyrics

நான் பாடும் மௌன ராகம்...
என் காதல் ராணி இன்னும்...
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத்தேடி தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா


கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூ வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று வேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

நன்றி: வைரமுத்து

சாதி மல்லிப் பூச்சரமே - Saathi Malli Poocharame Lyrics

சாதி மல்லிப் பூச்சரமே.... சாதி மல்லிப் பூச்சரமே
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னென்னு முன்னே வந்து 
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி


எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்று தான்
கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோனும்
அதில் இன்பத்தைத் தேடோனும்

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி


உலகமெல்லாம் உண்ணும் போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும் போது 
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத் தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னென்னு முன்னே வந்து 
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு

சங்கீத மேகம் தேன் சிந்தும் - Sangeetha Megam Then Sinthum Lyrics

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

ல.ல..ல ல லா..
ல.ல..ல ல லா..
ல.ல..ல ல ல ல லா..


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்


உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மனமே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

நன்றி: வைரமுத்து

இதயம் ஒரு கோயில் - Idhayam Oru Koyil Lyrics

ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ...

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்

ல..ல..ல...ல...ல..ல..ல..ல...ல...ல..ல...ல
ல..ல..ல...ல...ல..ல..ல..ல...ல...ல..ல...ல


ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்


காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத்தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா
அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது 

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதி தூரம் பாதியே
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - Vannam Konda Vennilave Lyrics

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே


பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தை பிரித்து விட்டால்
வானத்தில் ஏதும் இல்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால் 
சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே


நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னைப் பார்த்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்து விட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

நன்றி: வைரமுத்து