கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு - Kappaleri Poyaachu Suthamaana Lyrics

கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா

விடியில் வரையில் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வைக்கலெல்லாம் வாளாச்சு 
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா...

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
நெடு வானம் தூவும் தூரல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

இப்ப கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா

வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம்
கண்களால் கன்னத்தில் போட
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இங்கு நீ அங்கு நான் போராட

உனை கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோர் தீவா ஆனேன் வா வா
அம்மம்மா நாளெல்லாம் 
கானல் நீரை குடித்தேன்

இப்ப கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா

லாலல்லா லாலல்லா லாலல் லாலல்லா..
லாலல்லா லாலல்லா லாலல் லாலல்லா..
லா லா லா லா..
லாலல்லா லல்லா லாலல்லா...

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததை சொன்னதா பூங்காற்று

உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில் ஆடி
கை தொட்டு மெய் தொட்டு 
உன்னில் என்னைக் கரைப்பேன்

இப்ப கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா

நன்றி: வாலி

No comments:

Post a Comment