என்ன சொல்லி பாடி வருவேன் - Enna Solli Paadi Varuven Lyrics

என்ன சொல்லி பாடி வருவேன்
எங்க கதைய..
நான் யாருகிட்ட சொல்லி அழுவேன்
இந்த நெலய...

நூலுக்குள்ள ஆடைய வச்சான்
ஆடையில மானத்த வச்சான்
நூலுக்குள்ள ஆடைய வச்சான்
ஆடையில மானத்த வச்சான்

மானங்காக்கும் வேலய தான் நாங்க செய்யுறோம்
ஆமா மகத்தான கைத்தறியில் ஆடை நெய்யுறோம்

என்ன சொல்லி பாடி வருவேன்
எங்க கதைய..
நான் யாருகிட்ட சொல்லி அழுவேன்
இந்த நெலய...


நூல எல்லாம் சாயத்துல தான் 
முக்கி எடுப்போம் முக்கி எடுப்போம்
சாயம் போட்ட வண்ண நூல
காயப்போடுவோம்

நூல எல்லாம் சாயத்துல தான் 
முக்கி எடுப்போம் முக்கி எடுப்போம்
சாயம் போட்ட வண்ண நூல
காயப்போடுவோம்

காஞ்சு வரும் வேளயிலே.. ..ஏ.. ஏ...
காஞ்சு வரும் வேளயிலே.. ..
தறி போட்டு ஆடை நெய்யுவோம்
வண்ண வண்ண நிறங்களிலே ஆடை இருக்கு
எங்க வாழ்க்க மட்டும் வெளுத்துருச்சே
யாரு பொறுப்பு

என்ன சொல்லி பாடி வருவேன்
எங்க கதைய..
நான் யாருகிட்ட சொல்லி அழுவேன்
இந்த நெலய...


கையும் காலும் நோகும்படி அடிச்சிழுப்போம்
தெனம் உழைப்போம்
எந்திரத்தில் ஆடை நெய்ய ஆசை இல்ல

கையும் காலும் நோகும்படி அடிச்சிழுப்போம்
தெனம் உழைப்போம்
எந்திரத்தில் ஆடை நெய்ய ஆசை இல்ல

எப்பவும் தான் எங்க தொழிலு... உ.. உ...
எப்பவும் தான் எங்க தொழிலு எதுலயும் கொறஞ்சதில்ல
எப்பவும் தான் எங்க தொழிலு எதுலயும் கொறஞ்சதில்ல
கைத்தறி நெசவுக்குத்தான் மவுசு இல்ல
ஆனா.. கஞ்சி ஊத்தும எங்க உசுர போல... 

கைத்தறி நெசவுக்குத்தான் மவுசு இல்ல
எங்க பாட்டன் பூட்டன் செஞ்ச தொழிலு உசுர போல.. 

என்ன சொல்லி பாடி வருவேன்
எங்க கதைய..
நான் யாருகிட்ட சொல்லி அழுவேன்
இந்த நெலய...

No comments:

Post a Comment