ஊரு சனம் தூங்கிருச்சு - Ooru Sanam Thoongiruchu Lyrics

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சுருச்சு
பாவி மனம் தூங்கலயே அதுவும் ஏனோ புரியலயே

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சுருச்சு
பாவி மனம் தூங்கலயே அதுவும் ஏனோ புரியலயே


குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இளமயிலு மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே.. சேதி சொல்லும் பாட்டாலே

ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடி போனேன்
கன்னி பொன்னுதானே என் மாமனே.. என் மாமனே...

ஒத்தயில அத்தமக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலயே காலம் நேரம் கூடலயே

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சுருச்சு
பாவி மனம் தூங்கலயே அதுவும் ஏனோ புரியலயே


மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் கொழலு
நானா மாற கூடாதா...
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா.. மாமன் காதில் ஏறாதா...

நெலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்.. இந்த நேரந்தான்

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன ஏங்க ஏங்க வச்சான்...

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சுருச்சு
பாவி மனம் தூங்கலயே அதுவும் ஏனோ புரியலயே

No comments:

Post a Comment