குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா...

அம்மா வந்து சாப்பிட சொன்னா அழுது கொஞ்சம் பாப்பா

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டையிலே இவள நெனைக்கல

அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா...
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா...
யாருமில்லா அனாதயா கடையில கெடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியில இருந்தா

ஆயிரந்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
ஆயிரந்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பாவாகுமா
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பாவாகுமா
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா...
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா...
வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு
இத விட்டு விட்டு துடிக்குது பார் அப்பாவோட நெஞ்சு

கூடுமில்லே துணையுமில்லே வாடுது பிஞ்சு
கூடுமில்லே துணையுமில்லே வாடுது பிஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிகிட்டு மடியிலே கொஞ்சு

No comments:
Post a Comment