காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசேதான் கடவுளப்பா
கடவுளுக்கும் தெரியுமப்பா
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே
உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்கு கை மாறும் பணமே
உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ
விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
தாயைத்தவிர தந்தையைத்தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்
தாயைத்தவிர தந்தையைத்தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்
தலையா பூவா போட்டுப் பார்த்து
தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்
கல்லறை கூட சில்லரை இருந்தால்
வாய் திறந்தே மொழி பேசுமடா
கல்லறை கூட சில்லரை இருந்தால்
வாய் திறந்தே மொழி பேசுமடா
இல்லாதவன் சொல் சபை ஏறாமல் ஏளனமாகப் போகுமடா
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கொடுத்தவன் விழிப்பான்
எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
கொடுத்தவன் விழிப்பான்
எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலைதானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலைதானே
கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால்
கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகள் எல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே
உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ
விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ
நீ தேடும்போது வருவதுண்டோ
விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ
ஆ.. ஆ.. ஆ....ஆ...
ஓ.. ஓ.. ஓ... ஓ...
No comments:
Post a Comment