கண்ணீரும் புன்னகையும் கலந்து வர நின்றேனே.. ஏ..
ஒன்றுபட வழியிலயே உண்மைக்கு மொழியிலயே.. ஏ..
உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலயே.. ஏ..
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்த பாதையை பேதங்கள் மூடும்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்த பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
No comments:
Post a Comment