கண்கள் இரண்டும் என்று - Kangal Irandum Endru Lyrics

பதறிச் சிவந்ததே நெஞ்சம்
வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்
கதறிச் சிவந்ததே வதனம்
கலங்கி நடுங்கி குலைந்ததே மேனி

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை  அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை  அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

No comments:

Post a Comment