செண்பகத் தோட்டத்திலே.. ஏ..
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி...
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி..ஆ..ஆ...
பாவை தெரியுதடி...
தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே..ஏ..
தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே..
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி...
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி..ஆ..ஆ...
பாவை தெரியுதடி...
மேனி கொதிக்குதடி தலை சுற்றியே...
வேதனை செய்குதடி..
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்..
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துலவுதோ
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துலவுதோ
தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்
No comments:
Post a Comment