ஒரசாத உசுரத்தான் - Orasaatha Usurathan Song Tamil Lyrics

ஒருமுறை என்னைப் பார்த்து..
ஓ....ரக்கண்ணில் பேசு...
ஒருமுறை என்னைப் பார்த்து..
ஓரக்கண்ணில் பேசு...

நீ நெருங்கி வந்தா காதல் வாசம்...
என் உசுரு மொத்தம் ஒன்ன பேசும்...
ஒரசாத.. உசுரத்தான் உருக்காத.. 
மனசத்தான் அலசாத.. 
என் சட்ட கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

வெளுக்காத,
கனவெல்லாம் சிரிக்காத
எனைவிட்டு வெலகாத
தறிகெட்ட மனசு
ஒன்ன தேடி அலையும்
அடியே... அடியே...


ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம
ஒன் பின்ன அலையும்
ஒன் முட்ட முழி முறைச்சா
முன்னூறு ஊசி உள்ள எறங்கும்

கட்டுவீரியனுக்கும் காதல்
ஒன்னு வந்தா அடங்கும்.
என் குட்டி இதயத்துல
நீ தோண்ட பாக்குற சுரங்கம்

நீயும் என்ன நீங்கி போனா
நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாம தான் போகாதடி.....
பாசாங்கு தான் பண்ணாதடி

சத்தியமா ஒன் நினைப்பில்
மூச்சு முட்டி திக்குறேண்டி
கோவம் ஏத்தி கொல்லாதடி
கொத்தி கொத்தி தின்னாதடி


ஒரசாத உசுரத்தான்...
உருக்காத மனசத்தான்
அலசாத, என் சட்டை கிழிஞ்சி
வெளியே பறக்கும் இதயம்
வெளுக்காத,
கனவெல்லாம் சிரிக்காத
எனைவிட்டு வெலகாத
தறிகெட்ட மனசு
உன்னை தேடி அலையும்
அடியே... அடியே...

ஒரசாத உசுரத்தான்...
உருக்காத மனசத்தான்
அலசாத, என் சட்டை கிழிஞ்சி
வெளியே பறக்கும் இதயம்
வெளுக்காத,
கனவெல்லாம் சிரிக்காத
எனைவிட்டு வெலகாத
தறிகெட்ட மனசு
உன்னை தேடி அலையும்
அடியே...

No comments:

Post a Comment