தன்மானம் உள்ள நெஞ்சம் - எங்கேயோ திக்குதெச - Thanmaanam Ulla Nenjam Lyrics

பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்

தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாளாது
செவ்வானம் மின்னல் வெட்டி பன்னீரு வீழாது
காவேரித் தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலறுந்து வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு கூடிகட்டி ஆடுவேன்
அந்நாளில் நான் இருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஓ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு


எங்கேயோ திக்குதெச காணாத தூரந்தான்
எம்மாடி வந்ததென்ன என் வாழ்க்கை ஓடந்தான்
காவேரித் தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி
கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணாற நானும் காண இத்தனை நாள் ஆனது
இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும்பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி

நான் கங்கா நதியைக் காணும்பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஏ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு
ஓ..தையந் திய்யந்தக்கு திய்யந்தக்கு

1 comment:

  1. மகாநதி , இன்று வரை எங்கள் மனதில் பாய்ந்து கொண்டு இருக்கிறது.

    ReplyDelete