பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் - Pichai Paathiram Yenthi Vanden Lyrics

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...

பிண்டம் என்னும் எலும்பொடு சதைநரம்
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...

பிண்டம் என்னும் எலும்பொடு சதைநரம்
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...


அம்மையும் அப்பனும் தந்ததா..ஆ...
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா...ஆ...

அம்மையும் அப்பனும் தந்ததா..
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா..
இம்மையை நான் அறியாததா.. ஆ..
இம்மையை நான் அறியாததா..
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட..

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...


அத்தனைச் செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனைச் செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா.. இரு முறையா... 
பலமுறை பலப்பிறப்பெடுக்க வைத்தாய்...
புதுவினையா பழவினையா..
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் 
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே.. ஏ...
உன் அருள் அருள் அருள் என்று 
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே.... ஏ...

அருள்விழியால் நோக்குவாய்
மலர்பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...

பிண்டம் என்னும் எலும்பொடு சதைநரம்
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...

No comments:

Post a Comment