ஹே....... ஓ......... ம்........ லலலா..
பொன்மாலைப் பொழுதுஇது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ம்.. ம்... ம்.. ஹே.. ஆ... ஓ.. ம்.... ம்....ம்..
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஆ.. ஹே....... ஓ......... ஆ....... லலலா..
ம்..ம்...ம்...ஹே....... ஓ......... ஆ.......ம்..ம்..ம்...
No comments:
Post a Comment