அன்பு என்பதே தெய்வமானது - Anbu Enbathe Deivam Aanathu Lyrics

அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது
கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது
உள்ளமென்பதுள்ளவர்க்கு உண்மையானது
உலகமென்பதுள்ளவரை உறுதியானது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது


மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது


அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது


பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது

நன்றி: கண்ணதாசன்

1 comment: